தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு

முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு

முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு


ADDED : அக் 30, 2025 11:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 11:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பசும்பொன்: ரூ.3 கோடி செலவில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அவர் பேசியதாவது; 'அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்த தேவர் திருமகன்,' என்று அண்ணாதுரை பாராட்டியுள்ளார். ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வந்து பசும்பொன் திருமகனாரின் நினைவு போற்றக்கூடிய இந்த மணிமண்டபத்தை, 1974ல் கருணாநிதி கட்டிக் கொடுத்தார். பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இந்த மணிமண்டபத்தையும் கட்டினார்.

திமுக ஆட்சி முதல்முறையாக அமைந்த போது, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் எல்லாம், தங்களின் மக்களுக்கான கல்வி மேம்பாட்டிற்காக கல்லூரிகளை தொடங்க திட்டமிட்டார்கள். அவை அனைத்திற்கும் அனுமதி வழங்கியவர் கருணாநிதி. குறிப்பாக, முக்குலத்தோர் சமூகம் தங்களின் பெரும்பான்மையான இடங்களில் கல்லூரிகளை அமைக்க திட்டமிட்டார்கள். தேவர் கல்விச் சங்கம் உருவாக்கப்பட்டது. பசும்பொன் தேவர் கல்லூரி அமைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு 44.94 ஏக்கர் நிலத்தை கருணாநிதி வழங்கினார். ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும், என்றார்.எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்ஸூம் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us