முதல்வரின் தனிச் செயலாளர்களின் துறைகள் மாற்றி அமைப்பு!
முதல்வரின் தனிச் செயலாளர்களின் துறைகள் மாற்றி அமைப்பு!
ADDED : டிச 16, 2024 07:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்களின் துறைகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வரின் செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்கிறார். இதையடுத்து தனிச் செயலாளர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு;
முதல்வரின் 1வது தனிச்செயலாளர் உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
2வது தனிச் செயலாளர் சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இணைச் செயலாளர் லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து என 12 துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

