அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை 26ல் துவக்குகிறார் முதல்வர்
அரசு உதவி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை 26ல் துவக்குகிறார் முதல்வர்
ADDED : ஆக 19, 2025 10:16 PM
சென்னை:அரசு உதவி பெறும் பள்ளிகளில், வரும் 26ம் தேதி, காலை உணவு திட்டம் துவக்கப்பட உள்ளது.
சமூக நலத்துறை சார்பில், அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ல், இந்த திட்டத்தை, முதல்வர் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது; ஆனால், கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டத்தை வரும் 26ம் தேதி, சென்னையில் உள்ள ஒரு உதவி பெறும் பள்ளியில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி, மகளிர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சமூகநலத் துறை இயக்குநர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.