ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார்; அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார்; அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
ADDED : ஆக 21, 2026 10:58 AM

சென்னை: ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார் என சட்டசபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். வரலாற்றில் இல்லாத வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சுக்களெல்லாம் அவைக்குறிப்பில் நீக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதிலெல்லாம் கொடுக்கிறார்கள். இப்போது பாடலெல்லாம் பாடுகிறார்கள். இது சட்டசபையா? வேறு நிகழ்ச்சியா? என தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் அவையில் பேசிய முதல்வர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். அதன் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இவ்வாறு உதயநிதி பேசினார்.
தொடர்ந்து பதிலளித்த நிர்மல்குமார், 'ஜோசியம் என்று பேசுகிறார்கள்; ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட கதையெல்லாம் எங்களுக்கும் தெரியும்; எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுப்போம்' என்று காரசாரமாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழக சட்டசபையில் நடப்பது எல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும்; யார் எந்த தொகுதி சார்பாக கேட்கிறார்கள், அதற்கு பதில் சொல்வது தெரிய வேண்டும் என்பதற்காக தான் நேரலை தருகிறோம்.
நேரலை என்பது வெறும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லாமல், முழுமையான நேரலை என்பது தவெக ஆட்சியில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். கோப்புகளை திறப்பதில் முதல்வருக்கு தயக்கமில்லை.
ஊழல் கோப்புகளை நிச்சயமாக முதல்வர் விஜய் வெளியிடுவார். எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவார். இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.
நடவடிக்கை
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்வுகள்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலின் நேரலை ஒளிபரப்பு
