தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன், இங்கிலாந்துக்கு முதல்வர் பயணம்
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மன், இங்கிலாந்துக்கு முதல்வர் பயணம்
ADDED : ஆக 31, 2025 06:37 AM

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார சுற்றுப்பயணமாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை, ஜெர்மனி புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், வழியனுப்பி வைத்தனர்.
ஒப்பந்தங்கள் விமான நிலையத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
ஒரு வார பயணமாக, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். செப்., 8ல் தமிழகம் திரும்புவேன். இந்த பயணத்தில், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், இதுவரை, 10.62 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, 32.81 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான திட்டங்கள், நிறைவடையும் நிலையில் உள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கி விட்டன. இதற்கு மத்திய அரசு வெளியிடும் புள்ளி விபரங்களே ஆதாரம்.
இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெ யின், சிங்கப்பூர், அமெரிக்கா என, ஐந்து நாடுகளுக்கு சென்று வந்து உள்ளேன்.
அமெரிக்காவில் 19, ஸ்பெயினில் மூன்று, ஜப்பானில் ஏழு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆறு, சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என, 30,037 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகை யில், 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் வாயிலாக 18,498 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளது.
ஈ.வெ. ரா., படம் இந்த, 36 ஒப்பந்தங்களில், 23 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்கிறேன். அங்கு மேற்கொள்ளப்படும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.
இந்த பயணத்தில், செப்., 4ம் தேதி, ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், ஈ.வெ.ரா., படத்தை திறந்து வைக்க உள்ளேன். வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தன் பயணங்கள் எப்படி இருந்தனவோ, அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறார்.
ஆனால், நான் கையெழுத்திடுகிற அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறி னார்.

