தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திட்ட அனுமதி தர தாமதித்தால் ஒழுங்கு நடவடிக்கை: சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவு

 திட்ட அனுமதி தர தாமதித்தால் ஒழுங்கு நடவடிக்கை: சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவு

 திட்ட அனுமதி தர தாமதித்தால் ஒழுங்கு நடவடிக்கை: சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவு


ADDED : மே 13, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 12:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'கட்டுமான திட்ட அனுமதி கோப்புகள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் பிறப்பித்த உத்தரவு:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றபின் விஜய் பேசுகையில், துாய்மையான, வெளிப் படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என அறிவித்தார்.

இதன்படி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், துாய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுமான திட்ட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ்கள், மனைப்பிரிவு ஒப்புதல், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் மீது, சம்பந்தப் பட்ட பிரிவு அதிகாரிகள்

தொடர்ச்சி 4ம் பக்கம்

திட்ட அனுமதி...

முதல் பக்கத் தொடர்ச்சி

உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்ப மற்றும் கொள்கை முடிவு தொடர்பான பிரச்னைகள், துறைகளுக்கு இடையிலான பிரச்னைகள் காரணமாக முடிவு எடுக்க முடியாத கோப்புகள் குறித்து, திங்கள்கிழமைதோறும் ஆய்வு கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான திட்ட அனுமதி உட்பட பல்வேறு தலைப்புகளில் தாக்கலாகும் கோப்புகள், உரிய கால கெடுவுக்குள் முடிக்கப்படுவதை, பிரிவு அதிகாரிகள் தினமும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான கோப்புகள் மீது, உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில், அதிகாரத்துவ தடைகளை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

இந்த அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுவது, கோப்புகளை உரிய காரணம் இன்றி கிடப்பில் போடுவது தெரிந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர், அதிகாரிகள் மீது நடத்தை விதிகள் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபாஷ் முதல்வரே... நல்ல தொடக்கம்! ஒரு கட்டடத்துக்கு அனுமதி பெறவேண்டும் எனில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமாக இருந்தாலும் சரி; நகர ஊரமைப்பு இயக்ககமாக இருந்தாலும் சரி, சதுர அடிக்கு 27 ரூபாய், 'பார்ட்டி பண்டு -- கட்சி நிதி என்ற பெயரில், விண்ணப்பதாரர்களிடம் அதிகாரிகளால் வசூலிக்கப்பட்டு ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்ததொகையை தந்தால்தான், கட்டட அனுமதியே கிடைக்கும். முன்பு அ.தி.மு.க., ஆட்சியின்போது சதுர அடிக்கு, 25 ரூபாயாக இருந்த இந்த பார்ட்டி பண்டு தி.மு.க., ஆட்சியில் 27 ரூபாயாக அதிகரித்ததே தவிர, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இவ்வழக்கம் மாறவில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, இந்த அடாவடி வசூல் தொகையும் அதிகரித்துக் கொண்டே தான் போனது. இந்நிலையில்தான், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பதவியேற்றபின், நகர ஊரமைப்பு இயக்ககம் எடுத்த முடிவின்படி, இனி, எந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் பார்ட்டி பண்டு வசூலிக்கப்பட மாட்டாது என்றும், தகுதி உடைய விண்ணப்பங்களுக்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தை ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்கும் பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களிடம் பார்ட்டி பண்டு எதுவும் பெறக்கூடாது. அப்போதுதான், அரசின் நடவடிக்கை முழுமையாக மக்களை சென்றடையும். சபாஷ் முதல்வரே... இது நல்லதொரு தொடக்கம்! இதுபோன்ற இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை, மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us