தடையற்ற காஸ் வினியோகம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தடையற்ற காஸ் வினியோகம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ADDED : மார் 12, 2026 01:49 AM

சென்னை: 'தமிழகத்தில் வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி., காஸ் வினியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
ஹோட்டல்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளுக்கு, எல்.பி.ஜி., வினியோகத்தையே சார்ந்துள்ளன. இந்நிலையில், எல்.பி.ஜி., வினியோகத்தின் திடீர் நிறுத்தம், ஹோட்டல் துறைக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது; மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதை ஈடு செய்வதற்கான மாற்று எரிபொருள் மாற்றத்திற்கு அதிக காலமும், கணிசமான செலவும் ஏற்படும். எனவே, தமிழகத்தில் வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி., வினியோகம் செய்வதை உறுதி செய்ய, தொடர்புடைய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

