sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு

/

 போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு

 போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு

 போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு

1


ADDED : மார் 12, 2026 01:49 AM

Google News

ADDED : மார் 12, 2026 01:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், கவர்னர் ரவி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி, தமிழக கவர்னராக, 2021, செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். தன் பதவிக் காலத்தில், இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பலவற்றை முன்னெடுத்தார்.

மேலும், தான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், இந்திய பாரம்பரியம், தமிழக கலாசாரம் ஆகியவற்றை போற்றி பேசினார்.

அதேநேரம், தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் மூண்டது. தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும், பல்கலை துணை வேந்தர்கள் நியமனம், சட்டசபை உரை, சட்ட மசோதாக்கள் என, பல விவகாரங்களில், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை, கவர்னர் ரவி மேற்கொண்டார்.

இந்த சூழலில், மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ், ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக மாற்றம் செய்யப்பட்டார். தமிழக கவர்னர் பதவியை, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.

இந்நிலையில், கவர்னர் ரவி, நேற்று காலை தன் குடும்பத்தினருடன் டில்லி சென்றார். அவரை வழியனுப்பும் விதமாக, சென்னை விமான நிலையத்தில், அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு கவர்னராக, கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் இன்று பொறுப்பேற்கிறார்.






      Dinamalar
      Follow us