தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை

 கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை


ADDED : மார் 12, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையத்தின் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், துாத்துக்குடி விமான நிலையம் பகுதியில் அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, துாத்துக்குடியில், 4; துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us