ADDED : நவ 28, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் மான்செஸ்டராக விளங்கிய கோவைக்கு, வேலை தேடி மக்கள் வந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
வேலையில்லாமல், விவசாயமும், நெசவு தொழிலும் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலைமைக்கு காரணம், டாஸ்மாக் மதுக்கடைகள்தான். திருடர்களிடம் ஆட்சியை கொடுத்து, தலை குனிந்து இருக்கிறோம்.
தேர்தலில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும்; நிச்சயமாக, 2026ல் கூட்டணி அமைச்சரவை தான் அமையும்.
- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

