தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ கோகோ காப் வெற்றி

கோகோ காப் வெற்றி

கோகோ காப் வெற்றி


ADDED : ஆக 12, 2025 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்சினாட்டி: அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.

ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜின்யு வாங் மோதினர். அபாரமாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 2-6, 6-4, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை தோற்கடித்தார்.

மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-3 என ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல்லை வென்றார். டென்மார்க்கின் கிளாரா டாசன் 6-3, 6-7, 6-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜஜோவிச்சை வீழ்த்தினார்.

மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் சோபியா கெனின், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், பிரான்சின் கரோலின் கார்சியா தோல்வியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us