தேங்காய் எண்ணெய் விலை: 1 லி., ரூ.560 ஆக எகிறியது; பண்டிகை சீசனில் மேலும் விலை உயர வாய்ப்பு
தேங்காய் எண்ணெய் விலை: 1 லி., ரூ.560 ஆக எகிறியது; பண்டிகை சீசனில் மேலும் விலை உயர வாய்ப்பு
UPDATED : ஜூலை 27, 2025 07:33 AM
ADDED : ஜூலை 27, 2025 07:08 AM

பொள்ளாச்சி: தேங்காய் விளைச்சல் குறைந்து, தேங்காய் எண்ணெய் விலை லிட்டர், 560 ரூபாயாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், சில ஆண்டுகளாக தென்னையில் வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் போன்ற பிரச்னைகள் அதிகரித்தன. இதனால், நடப்பாண்டு தேங்காய் சீசனில் விளைச்சல் குறைந்தது. வழக்கத்தை விட, 40 சதவீதம் உற்பத்தி குறைந்ததால், தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தது.
இதனால், சில்லரை விற்பனையில், தேங்காய் எண்ணெய் லிட்டர், 410 முதல் 450 ரூபாய் வரையும், செக்கு எண்ணெய் லிட்டர், 560 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ''தேங்காய் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக, பலரும் கொப்பரை உற்பத்தி செய்யாததால், கொப்பரை உலர் களங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
''ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின் போது, மேலும், விலை உயரும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தேங்காய் சீசன் துவங்கும். அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை,'' என்றார்.