ADDED : ஆக 10, 2025 01:46 AM
விருதுநகர்:கொப்பரை விளைச்சல் குறைந்ததால் தேங்காய் எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ. 6400 என விற்பனையானது. தற்போது கொப்பரை வரத்து அதிகரித்துள்ளதால் ரூ. 400 வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் காங்கேயம், வெள்ளக்கோயில், துாத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் காங்கேயம், வெள்ளக்கோவில், துாத்துக்குடியில் உற்பத்தியாகும் தே.எண்ணெய் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மரங்களில் பாதிப்பு ஏற்பட்டு தேங்காய் விளைச்சல் சரிந்தது.
எண்ணெய் 15 கிலோ ரூ. 2850 முதல் ரூ. 3000 விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 6400 வரை சரசரவென உயர்ந்தது.
தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தே.எண்ணெய் 15 கிலோ ரூ. 400 குறைந்து ரூ. 6100 என விற்பனை செய்யப்படுகிறது. கொப்பரை வரத்து அதிகமானால் எண்ணெய் விலையும் மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

