ADDED : மார் 01, 2024 06:52 AM

மதுரை : கோவை பார்க் கல்வி குழுமத்தின் பொன்விழா ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தின் அரசு, தனியார் பள்ளிகளின் 200 ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நடந்தது.
தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் அனுஷா ரவி, நல்லாசிரியர் பாஹிரத நாச்சியப்பன், வழக்கறிஞர்கள் கோகுலகிருஷ்ணன், தாமோதர கிருஷ்ணன், மன்னர் கல்வி குழுமங்களின் தலைவர் மகேஷ் துரை உள்ளிட்டோர் விருது வழங்கினர்.
பார்க் கல்வி குழுமம், வரலாறு, இன்றைய செயல்பாடு, சாதனைகள் குறித்து பேராசிரியர் துரைசாமி பேசினார். முதன்மை செயலர் அனுஷா ரவி, 'இளைய தலைமுறைக்கு நல்ல கல்வியையும் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் அமைத்து தருவதே எனது குறிக்கோள், லட்சியம்' என்றார்.
கோபிநாத், 'ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை தாங்கள் முதலில் கற்றுக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்' என்றார். பார்க் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் குமரேசன் நன்றி கூறினார்.

