ADDED : அக் 02, 2024 02:04 AM

மதுரை:மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், 55, தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை தமிழ், பிராமி வட்டெழுத்துகளால் வரைந்து அசத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: என் குடும்பத்தொழில் நகை செய்வது என்றாலும், ஓவியம் மீதான ஈடுபாடால் வரைந்துகொண்டே இருப்பேன்.
'தினமலர்' நாளிதழின் தீவிர ரசிகன். 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறேன். 'தினமலர்' நாளிதழின் உயர்ந்த தரம், அடையாளத்திற்குக் காரணமானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாணயத்தில் டி.வி.ஆர்.,
'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு சார்பில், டி.வி.ஆர்., உருவ நாணயம் வெளியிடக் கோரி, நாணய வடிவில் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார், திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன். இவர் ஆண்டுதோறும், டி.வி.ஆர்., பிறந்த நாளில், அவரது உருவப்படத்தை வித்தியாசமாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்தாண்டு மத்திய அரசை டி.வி.ஆர்., உருவப்படத்துடன் கூடிய நாணயத்தை வெளியிடக் கோரி, நாணய வடிவில் உருவப்படத்தை வரைந்து உள்ளார்.
� நாணய வடிவில் மற்றும் தமிழ், பிராமி வட்டெழுத்துகளில் டி.வி.ஆர்.,

