ADDED : பிப் 07, 2025 08:24 PM

திருப்பூர்: திருப்பூர் அருகே மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ஊமச்சி வலசு பகுதியைச் சேர்ந்த மாணவர் குருராஜ் 18, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மூளைச்சாவு அடைந்து அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, குருராஜ் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், கண்கள் என உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. துயரமான சூழலிலும், உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதம் அளித்த பெற்றோரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.