தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வண்ணக் காகிதமா... மண்ணுக்கான திட்டமா?

 வண்ணக் காகிதமா... மண்ணுக்கான திட்டமா?

 வண்ணக் காகிதமா... மண்ணுக்கான திட்டமா?


ADDED : ஏப் 23, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தார்ச்சாலைகளில் அனல் காற்று வீசுவதை விட, அரசியல் களத்தில் வீசும் வாக்குறுதிகள் மக்களை அதிகம் யோசிக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் 'சின்னம்' பார்த்தே வாக்களித்த காலம் மறைந்து, இன்று வேட்பாளர்களின் தகுதியையும், திட்டங்களின் சாத்தியக்கூறுகளையும் பகுப்பாய்வு செய்யும் ஓர் ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் வேரூன்றி வருகிறது.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் இன்றைய இளம் தலைமுறை, வெறும் 'நெட்டிசன்கள்' மட்டுமல்ல; தீர்க்கமான 'அரசியல் விமர்சகர்கள்'. மாநில அளவிலான கவர்ச்சித் திட்டங்களை விட, மாவட்டத்தின் 'உள்ளூர் வலி'களை முன்னிலைப் படுத்தும் வேட்பாளர்களுக்கே மக்களின் ஆதரவு பெருகும் சூழல் நிலவுகிறது.

வாக்குறுதிகள் வெறும் வண்ணக் காகிதங்களா அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான திட்டங்களா? என்ற அரசியல் தெளிவே ஒரு ஜனநாயகத்தின் உண்மையான வெற்றி.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தொகுதிக்குள் வராமல், பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது 'மக்கள் மன்றத்தை' சந்திக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளைத் தாண்டி, கொளுத்தும் வெயிலில் மக்கள் மத்தியில் நின்று குறைகளைக் கேட்கும் மக்கள் பிரதிநிதிகளே மண்ணுக்கான திட்டங்களை வழங்க முடியும் என்பதே வாக்காளர்களின் இறுதித் தீர்ப்பு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us