ADDED : ஜூன் 26, 2026 01:31 AM
சென்னை: வணிக சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் மீதான கட்டுப்பாடுகளை பெட்ரோலிய அமைச்சகம் நீக்கியுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
இந்தாண்டு மார்ச்சில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால், வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்ய, ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு, வணிக காஸ் சிலிண்டர்கள் வினியோகம் நிறுத்தப்பட்டது.
அடுத்த சில வாரங்களில், வணிக சிலிண்டர் வினியோகம் 20 சதவீதம், 50 சதவீதம் என, படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது, நாடு முழுதும் வணிக சிலிண்டர் வினியோகத்தில் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
