தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நெல் கொள்முதலுக்கு கமிஷன்? புகார் தெரிவிக்க 95008 01465

 நெல் கொள்முதலுக்கு கமிஷன்? புகார் தெரிவிக்க 95008 01465

 நெல் கொள்முதலுக்கு கமிஷன்? புகார் தெரிவிக்க 95008 01465


ADDED : செப் 22, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க, 'வாட்ஸாப்' எண் வெளியிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிக்கை:

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில், கடந்த 1ம் தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சன்ன ரக நெல் குவின்டால் 2,750 ரூபாய்க்கும், சாதாரண ரகம் 2,600 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை, 20 ஆயிரத்து 196 விவசாயிகளிடம் இருந்து, 1.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி, நெல் விற்பனை செய்யலாம்.

கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் அல்லது பணம் வசூலிப்பதை பற்றி புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உழவர் உதவி மையத்தை, 95008 01465 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us