ராதாவின் புகார் உண்மைக்கு புறம்பானது: அம்பிகா விளக்கம்
ராதாவின் புகார் உண்மைக்கு புறம்பானது: அம்பிகா விளக்கம்
ADDED : செப் 22, 2026 01:14 AM
சென்னை: தனது சகோதரியான நடிகை ராதா அளித்துள்ள புகார், உண்மைக்கு புறம்பானது என, நடிகை அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
மதுரவாயலில் ஏ.ஆர்.எஸ்., சொத்தில், 50 சென்ட் நிலம் பங்கில் மோசடி நடந்துள்ளது. ஏ.ஆர்.எஸ்., கார்டன்ஸ் ஸ்டூடியோவில் மூன்றில் ஒரு பங்குரிமை உள்ளது. மேலும், வருமான வரித்துறையினரால் திருப்பி அளிக்கப்பட்ட 1,299 கிராம் தங்க நகையை ராதா திருடியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த ஜூலையில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் விசாரணை நடத்திஉள்ளனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில், ராதா, அம்பிகாவுடனான பிரச்னையை தீர்க்கும் வகையில், ஐந்து காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. போலீஸ் கமிஷனரிடம் வழங்கிய புகார் விசாரணையில் உள்ளது.
இதுதவிர, கேரளத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு, ராதா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலம், தங்க நகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை மறைத்து ராதா நாடகமாடுகிறார். அவரின் புகார் உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு விளக்கத்தில் கூறியுள்ளார்.
