தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பால் பொருட்களில் விதிமீறல்: ஆய்வு செய்ய ஆணையம் உத்தரவு

பால் பொருட்களில் விதிமீறல்: ஆய்வு செய்ய ஆணையம் உத்தரவு

பால் பொருட்களில் விதிமீறல்: ஆய்வு செய்ய ஆணையம் உத்தரவு


UPDATED : அக் 10, 2026 07:05 PM

ADDED : அக் 10, 2026 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:05 PM ADDED : அக் 10, 2026 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நாடு முழுதும், பால் மற்றும் பால் பொருட்களில், 21 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனங்களில் ஆய்வு செய்ய, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

பால், தயிர், நெய், ஐஸ்கிரீம், பனீர் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் 21 நிறுவனங்களின், 73 கிளைகளில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிகளை பின்பற்றவில்லை.

தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தலைமையிடமாக வைத்து செயல்படும், முன்னணி நிறுவனங்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகளின்படி, பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை, பாது காப்பை உறுதி செய்ய, கள ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வு, மாதிரி சேகரிப்பு, பரிசோதனை முடிவுகள் என, அனைத்து விபரங் களையும், எப்.எஸ். எஸ்.ஏ.ஐ., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us