உள்ளடக்கத்திற்கு செல்ல

எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உறுதி; அமைச்சர் கீர்த்தனா
எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உறுதி; அமைச்சர் கீர்த்தனா
ADDED : நவ 05, 2026 03:55 PM

அ நிறம் | அளவு
சென்னை: உலகளவில் தனியாருக்குச் சொந்தமான முன்னணி கிளவுட் உள்கட்டமைப்பு நிறுவனமான Vultr, சென்னையில் தனது 20 மெகாவாட் ஏஐ சூப்பர் கிளஸ்டர் மையத்தை துவங்கி உள்ளது.
தமிழகத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புச் சூழலில் ஒரு முக்கிய மைல்கல் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
அவரது பதிவு; ஏஐ தொழில்நுட்பத்தில் தமிழகம் பெற்று வரும் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.
முதல்வர் விஜயின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் தொழில் நுட்பங்களை உருவாக்கும்.
அவற்றைச் செயல்படுத்துவதிலும் தமிழகத்தை ஒரு முக்கிய மையமாக மாற்ற நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார்.
