தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?'

'எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?'

'எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிடுவதா?'


ADDED : டிச 24, 2024 09:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:எம்.ஜி.ஆருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எம்.ஜி.ஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுள்ளார். யாருடனும் ஒப்பிடவே முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்., ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைவரையும் சமமாக போற்றியவர். ஜாதி, மதம் கடந்து, அனைவரையும் சமத்துவமாக பார்க்கும் இயக்கம் அ.தி.மு.க.,

மதத்தால் பிரிவினையை துாண்டுவதுதான் பா.ஜ.,வின் வேலை. பா.ஜ.,வில் சமத்துவம் இல்லை. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்றுதான் பா.ஜ., செயல்படுகிறது. எனவே, எந்த நிலையிலும் எம்.ஜி.ஆரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடவே முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us