ADDED : நவ 27, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டுதோறும் பருவ மழை காலத்தில், டெல்டா பகுதியில் சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகிறது. பாசன கால்வாய்களை துார்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், தி.மு.க., அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது.
இதன் விளைவு, இந்தாண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள், 2,000 ஏக்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம், டெல்டாவில் நடக்கும் விவசாயம் தான். ஆனால், இதுகுறித்து சிறிதும் கவலை இல்லாமல், கருணாநிதிக்கு சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே, தி.மு.க., அரசு செய்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.