ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு: பா.ஜ., வலியுறுத்தல்
ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு: பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2025 01:36 AM
சென்னை: 'விவசாயிகளை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை உடனே ஆய்வு செய்து, ஏக்கருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், தொடர்ச்சியாக மழை வெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பூவாலை மேற்கு கிராமத்தில், கன மழை காரணமாக, 750 ஏக்கர் பரப்பளவில், நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பது கவலை அளிக்கிறது.
அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான, பரவனாறு - அருவாமுக்கு திட்டம், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
சமீபத்தில் அப்பணிகளை துவக்கிய தி.மு.க., அரசு, ஆறுகளை முழுதுமாக துார் வாராமல், தடுப்புச்சுவர் கட்டாமல் இழுத்தடித்ததே, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணம்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில், 'நானும் டெல்டாக்காரன் தான்' என, வெற்று பெருமை பேசி வரும் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை ஏமாற்றாமல், சேதமடைந்த நெற்பயிர்களை, உடனே ஆய்வு செய்து, ஏக்கருக்கு 50,000 ரூபாய் வீதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

