அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!
அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!
UPDATED : ஏப் 22, 2025 05:29 PM
ADDED : ஏப் 22, 2025 03:25 PM

மதுரை: ஹிந்து மதம் பற்றி அவதுாறாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்கு பதிய உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.
மதுரை பிரவீன்குமார் தாக்கல் செய்த மனு:தமிழக அமைச்சர் பொன்முடி ஏப்.5 ல் சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஹிந்து மதம் மற்றும் பெண்கள் பற்றி அவதுாறாக, ஆபாசமாக பேசினார். அமைச்சர் என்பதை மறந்து நாகரீகமற்ற முறையில் மத ரீதியான பிரச்னையை உருவாக்கும் நோக்கில் பேசியுள்ளார். பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை போலீஸ் கமிஷனர், புதுார் போலீசாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.தனபால் விசாரித்தார்.
அரசு தரப்பு: புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி விசாரணையை போலீசார் முடித்துவிட்டனர். இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதி: மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சட்டத்திற்குட்பட்டு உரிய முறையில் நிவாரணம் தேடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.