ADDED : அக் 01, 2025 08:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் ஆய்வை முடித்துக்கொண்ட பின், தேசிய ஜனநாயக கூட்டணி குழுவினர் கூறியதாவது:
விஜய் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை முன்வைக்க விரும்பினோம். உள்ளூர் அல்லாத சிலர் கூட்டத்துக்குள் ஊடுருவி, கைகளில் வைத்திருந்த கத்தியால், சிலரை காயப்படுத்தியதாக விசாரணையின் போது பெண் ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, அது பற்றி விளக்கம் பெற முயன்றோம்.
இதற்காக திங்கட்கிழமையே, எங்கள் கட்சியினர் கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் அப்பாயின்மென்ட் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் எங்களை சந்திக்கவில்லை. முதலில், மாலை 3:00 மணிக்கு சந்திக்க ஒப்புக்கொண்டனர்.
பின், இருவரும் எங்களது போன் அழைப்பை ஏற்கவில்லை. இவ்விருவர் மீதும் நடவடிக்கை எடுக்க, பார்லிமென்டில் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.