ADDED : ஆக 26, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டரிடம், வக்கீல் சிவசாகர் அளித்த புகார் மனு:
மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின், மாநில மாநாட்டை காணொளியில் பார்த்தேன். கட்சி தலைவர் விஜய் பேசும்போது, தமிழக முதல்வரை, 'அங்கிள், வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்' என, விமர்சித்தார். இந்த பேச்சு, ஸ்டாலினை அவமதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதனால், விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

