ADDED : ஜன 05, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு என்பவர் புகார் மனு அளித்தார்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தததாவது:
நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதிகாலமானார். அன்று இரவு 10:30 மணிக்கு கோயம்பேடில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் காலணியை விஜயை நோக்கி வீசினார். இச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார்விசாரிக்கின்றனர்.