ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு
ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்: கடலூர் மேயர் வீட்டில் ரெய்டு
ADDED : ஏப் 18, 2024 03:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடலுார் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வை சேர்ந்த சுந்தரி உள்ளார். இவரது கணவர் ராஜா தி.மு.க., மாநகர செயலாளராக உள்ளார். இவர் கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஓட்டிற்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதியம் 1:30 மணியளவில் 3 கார்களில் வருமானவரி துறை அதிகாரிகள் திடீரென மாநகராட்சி மேயர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் மதியம் 2:45 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.

