ஆணைய தலைவர் பாதுகாப்பு ரத்துக்கு எதிராக புகார் மனு
ஆணைய தலைவர் பாதுகாப்பு ரத்துக்கு எதிராக புகார் மனு
ADDED : நவ 08, 2024 11:12 PM
சென்னை:'சென்னையை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் கல்யாணசுந்தரம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி உள்ள புகார் மனு:
தமிழகத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக, நீதிபதி மணிக்குமார் உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் குறித்து, எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
எனவே, நீதிபதி மணிக்குமாருக்கான பாதுகாப்பை விலக்கிக் கொண்டது, மனித உரிமைகள் ஆணைய காவல்துறை அதிகாரியை மாற்றியது தொடர்பான நடவடிக்கைகள், எந்த சட்ட விதிகள், ஆணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.