என்ன கொடுமை சார் இது... முதல்வர் கிளம்பிய உடனே 100 நாள் திட்டத்தை நிறுத்தியதாக புகார்
என்ன கொடுமை சார் இது... முதல்வர் கிளம்பிய உடனே 100 நாள் திட்டத்தை நிறுத்தியதாக புகார்
ADDED : ஜன 23, 2025 12:49 PM

காரைக்குடி: முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய மறுநாளே, 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன்பு சிவகங்கை சென்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் கட்டப்பட்ட தமிழ் நூலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.பிறகு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிலையில், காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தை காரைக்குடி மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ஈடுபட முயன்றனர்.
அப்போது, அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சியாக தங்கள் கிராமத்தை இணைத்ததால், இன்று 100 நாள் வேலைக்கு வந்த போது தங்களுக்கு வேலை தரவில்லை என்று கூறியுள்ளனர். அப்போது, தங்கள் கிராமம், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த இலுப்பக்குடி பெண்கள் சாலையில் குவிந்துள்ளனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் சிவகங்கையில் இருந்து கிளம்பிய மறுநாளே, 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்பட்டதாக காரைக்குடி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

