மாநிலத்தின் நலன் குறித்த கவலையா: ஆர்.எஸ்.எஸ்., கேள்வி
மாநிலத்தின் நலன் குறித்த கவலையா: ஆர்.எஸ்.எஸ்., கேள்வி
ADDED : மார் 23, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவின் பெங்களூரில் தொகுதி மறுவரையறை குறித்து, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் அருண் குமார் நேற்று கூறியதாவது:
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை துவங்கவில்லை; தொகுதி மறுவரையறை குறித்து பேசவில்லை; இது தொடர்பாக சட்ட வரைவு அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை. அப்படியிருக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இது குறித்து விவாதிப்பது ஏன்?
தி.மு.க., நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அரசியல் நோக்கம் உள்ளதா அல்லது உண்மையிலேயே மாநிலத்தின் நலன் குறித்து கவலைப்படுகின்றனரா? நாட்டு மக்களிடையே ஸ்டாலின் உள்ளிட்டோர் வீண் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.