ADDED : ஜூலை 09, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு வழங்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இயல் இசை நாடக மன்றம், அவர்களுக்கு இரண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பளிக்கிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 13 பரதநாட்டிய கலைஞர்கள், தலா 10 குரலிசை, மிருதங்க கலைஞர்கள், ஆறு கிராமிய கலைஞர்கள், தலா இரண்டு தனி வயலின் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள், தலா ஒரு சாக்சபோன், கஞ்சிரா, கடம், கதாகலாட்சேபம், வயலின் கலைஞர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.