UPDATED : ஏப் 09, 2025 09:17 PM
ADDED : ஏப் 09, 2025 09:14 PM
சென்னை:தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 1980 - 84, 1985 - 1988 , 1989 - 1991, 1991 - 1996ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.,வாகவும், 1977 - 80ம் ஆண்டு எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். பார்லிமென்டில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலை நாட்டியவர்.
இவரை பாராட்டி, கடந்த 2024ம் ஆண்டு, தமிழக அரசு சார்பில், 'தகைசால் விருது' வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமிழக சட்டசபையில், நேற்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேசியத்தை வளர்க்க பெரும் தொண்டாற்றியவர்
குமரி ஆனந்தன், இளைஞராக இருந்தபோது, காமராஜரின் தொண்டராக தேசியத்தை
வளர்க்க பெரும் தொண்டாற்றியவர்; ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுடன்
நெருங்கிய நட்புடன் இருந்தவர். தியாகி சுப்ரமணிய சிவாவின் எண்ணத்தின்படி,
பாரதமாதா கோவில் அமைக்கப்பட, பாதயாத்திரை நடத்தியவர். இதற்காக
ராமகோபாலனுடன் பெருமுயற்சி எடுத்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு,
இளைஞர்களிடம் தேசிய சிந்தனை ஏற்படுத்த செயல்பட்டவர்.
அவரது மறைவுக்கு, ஹிந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநிலத்தலைவர், ஹிந்து முன்னணி

