தீக்குளித்த பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு பிரதமர் ஆறுதல்
தீக்குளித்த பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு பிரதமர் ஆறுதல்
ADDED : மார் 02, 2026 05:57 AM

* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் சமீபத்தில் தீக்குளித்து இறந்தார்.
நேற்று மதுரை வந்த பிரதமர் மோடி, மண்டேலா நகரில் கூட்டம் தொடங்கும் முன், பூர்ணசந்திரனின் தாய் காளீஸ்வரி, மனைவி இந்துமதி, மகன்கள் சிவனேஷ், இனியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். பின் னர் பொதுக்கூட்ட மேடை யில் பேசும் போது, அவர்களுக்கு ஆறுதல் கூறியதை தெரிவித்தார்.
* பொதுக்கூட்ட மேடைக்கு மாலை, 5:00 மணிக்கு பிரதமர் வந்தார். 5:42க்கு பேச ஆரம்பித்த பிரதமர், 6:25க்கு முடித்தார். கடந்த முறை ஹிந்தியில் பேசிய பிரதமர், இம்முறை ஆங்கிலத்தில் பேசினார்.
* பிரதமருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏலக்காய் மாலை அணிவித்தார்.
பின், திருப்பரங்குன்றம் முருகன் படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
* மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை, மத்திய அரசு கிடப்பில் போட்டதை கண்டித்தும், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
* பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி தலைமையில் காங்கிரசார் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

