ADDED : ஜன 27, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இரு சக்கர வாகன பேரணியை, டில்லி முதல் கன்னியாகுமரி வரை, தேசிய சித்த மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறது. பல்லாயிரம் ஆண்டு பழமையும், சிறப்புகளும் உடைய சித்த மருத்துவம் குறித்து, இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் விழிப்புணர்வும், புரிதலும் இல்லை.
சித்த மருத்துவத்தின் சிறப்புகளில் முதன்மையானது, அது நோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், நோயின் அடிப்படையை கண்டறிந்து, அதற்கு தீர்வு காண்பது தான். எனவே, சித்த மருத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட, நாடெங்கும் மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் சித்த மருத்துவ முகாம்களை, மத்திய அரசின் ஆயுஷ் துறை நடத்த வேண்டும்.
- அன்புமணி
பா.ம.க., தலைவர்.

