ADDED : பிப் 12, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, நேற்று காலை, துவாக்குடி நோக்கி தனியார் பஸ் சென்றது. அதில், பயணித்த பெண்ணை, உரிய நிறுத்தத்தில் இறக்கி விடாமல், சற்று தள்ளி இறக்கி விட்டுள்ளனர். பெண்ணுக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டக்டர், பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
அதன் பின், துவாக்குடி சென்ற பஸ், மீண்டும் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்த போது, சூளைக்கரை பஸ் ஸ்டாப்பில், ஐந்து பேர் கொண்ட கும்பல் பஸ்சில் ஏறி, மாத்துாரை சேர்ந்த கண்டக்டர் மூக்கையன், 39, என்பவரை சரமாரியாக தாக்கியது.
பயணியர், கண்டக்டரை மீட்டனர். பஸ் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கண்டக்டர் மூக்கையன் புகாரில், காந்தி மார்க்கெட் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.

