உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 01, 2026 02:53 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசில், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜேஷ்குமார், உயர்கல்வித்துறை அமைச்சராக விஸ்வநாதன் பணியாற்றி வருகின்றனர். சட்டசபையில், ஆளும்கட்சி பகுதியில், முதல் வரிசையில் இவர்களுக்கு இருக்கை வழங்கப்பட்டு உள்ளது.
நான்காவது வரிசையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தாரகை கத்பட், முகமது யூனுஸ் ஆகியோருக்கு, இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவராக தாரகை கத்பட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்கள் அமரும் முதல் வரிசையில், பா.ம.க., சட்டசபை குழுத் தலைவர் சவுமியா அன்புமணி அருகே, அவருக்கு நேற்று இருக்கை ஒதுக்கப்பட்டது.
