காங்., எம்.எல்.ஏ.,வை கண்டித்து தி.மு.க போஸ்டர் இதுதான் கூட்டணி தர்மமா என காங்கிரசார் குமுறல்
காங்., எம்.எல்.ஏ.,வை கண்டித்து தி.மு.க போஸ்டர் இதுதான் கூட்டணி தர்மமா என காங்கிரசார் குமுறல்
ADDED : பிப் 07, 2025 10:26 PM
தி.மு.க., ஆட்சியை விமர்சித்த காங்., - எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்க்கு எதிராக, கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுதான் கூட்டணி தர்மமா என, பதிலுக்கு காங்கிரசார், சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.
துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தி.மு.க., அரசிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினாலும், செய்து தருகிறோம் என்ற பதில் மட்டுமே சொல்லப்படுகிறது. எதுவுமே செய்வதில்லை. நான் மட்டும் இல்லை; மற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களும் என்னை போலத்தான் புலம்புகின்றனர்' என்றார்.
இதை கண்டித்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க., சார்பில், 'வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற தலைப்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
'தொகுதி பக்கமே வராமல், தொகுதி மக்களை சந்திக்காமல், தொகுதி மக்களின் அடிப்படை தேவை என்பதை பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுக்காத எம்.எல்.ஏ., நீங்கள் தி.மு.க., அரசை குறை சொல்லலாமா?' என, அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், 'கூட்டணி தர்மம் இதுதானா?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.