வாழ்த்துகள்... வாழ்த்துகள்...! நிருபர்கள் கேள்விக்கு நடிகர் ரஜினி பதில்
வாழ்த்துகள்... வாழ்த்துகள்...! நிருபர்கள் கேள்விக்கு நடிகர் ரஜினி பதில்
ADDED : ஜன 28, 2025 09:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பத்மபூஷன் விருது அறிவிக்கப் பட்டுள்ள நடிகர் அஜித்குமாருக்கு, 'வாழ்த்துகள்...! வாழ்த்துகள்' என நடிகர் ரஜினிகாந்த் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இன்று (ஜன.,28) அதிகாலை சென்னைக்குத் திரும்பினார். அப்போது அவரிடம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஓடிபோய் கேள்வி கேட்க முயன்றனர்.
அப்போது நிருபர் ஒருவர் நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ரஜினி, “வாழ்த்துகள்... வாழ்த்துகள்” என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

