ADDED : ஆக 30, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் எம்.பி., யின் அலுவலகம் அமைந்திருக்கிறது.
இங்கு, கட்சி தொண்டர் களுடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சசிகாந்த் செந்தில் நேற்று துவக்கினார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 'சமக்ரா சிக் ஷா அபியான்' திட்ட நிதியை வழங்காததை கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ''தமிழகத்திற்கு 2,152 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்திருப்பதால், 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது,'' என்றார்.

