சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அறிக்கையை திருத்திய காங்.,
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அறிக்கையை திருத்திய காங்.,
ADDED : நவ 20, 2024 07:48 PM
சென்னை:'பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மசூலிப்பட்டினத்தில் அரங்கேறிய கொடிய சம்பவம், உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே, பல பேர் முன்னிலையில் நடந்திருப்பது மிகுந்த வேதனையை தருகிறது. படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையையும், தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும். பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன், 'சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தலைதுாக்குவதற்கு இது வாய்ப்பாக அமைந்து விடும்' என்ற வாசகங்கள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பின்னர், பள்ளி ஆசிரியை தனிப்பட்ட முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்ததும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என கருதிய செல்வப்பெருந்தகை, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.