ADDED : ஜன 25, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 2016ல், விடுதலை சிறுத்தைகள் மாநாட்டிலேயே, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசியுள்ளோம். எங்கள் முழக்கம், கோட்பாடு அடிப்படையிலானது. ஆனால், தமிழக காங்கிரஸ் முன்வைப்பது, கோட்பாடு அடிப்படையிலானதா, தேர்தல் பேரத்திற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது.
கோட்பாடு அடிப்படையில் என்றால், கடந்த தேர்தலில் பேசினரா; காங்., ஆளும் மாநிலங்களில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்துள்ளனரா; இந்திய அளவில், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதில், காங்கிரஸ் நிலைப்பாடு என்ன? தமிழக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரசார் சொல்வதால், தி.மு.க., கூட்டணிக்குள் சலசலப்பும் குழப்பமும் ஏற்படுகிறது. என்ன நோக்கத்திற்காக இப்படி சொல்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
- வன்னிஅரசு துணை பொதுச்செயலர், விடுதலை சிறுத்தைகள்

