ADDED : ஜூலை 22, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி:
பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. தமிழகத்தில், ஆட்சியில் இடம் வேண்டும் என்று காங்., கேட்பதில் தவறில்லை.
ஆட்சியில் பங்கு என்பதை தி.மு.க., கூட்டணியிலேயே சிலர் முன் வைக்கின்றனர்.
தி.மு.க.,விற்கு விழும் ஓட்டுகளில் நான்கில் மூன்று ஓட்டு காங்., கட்சியுடையது என்று கூறுவேன். மதுரையில் நடக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்கு, ராகுல் வருவார் என்பது கற்பனை.
இவ்வாறு அவர் கூறினார்.

