'காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது': சொல்கிறார் தமிழக காங்., பார்வையாளர்
'காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது': சொல்கிறார் தமிழக காங்., பார்வையாளர்
ADDED : நவ 29, 2025 12:45 AM

திண்டுக்கல்: ''தமிழகத்தில் காங்.,- தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது'' என தமிழக காங்., மேலிட பார்வையாளர் வேணுகோபால் ராவ் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: காங்., கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையிலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுடன் நேர்காணல் நடக்கிறது. அனைத்து நியமனங்களும் நேர்மையாக, வெளிப்படையாக அமையும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் என அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் .
மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக காங்.,செயல்படுகிறது. ஒவ்வொரு தொண்டரிடம் பெறப்படும் கருத்து தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.
தமிழக தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிவோம். காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாகவே உள்ளது. தேர்தலில் கூடுதல் இடம் கேட்பது குறித்து தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். இதுகுறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் காலம் உள்ளது என்றார்.

