ADDED : ஆக 28, 2025 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வருவதற்கு எதிராக பேசுகின்றனர். அவர்கள் தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கவில்லை என்பது தான் அதன் அர்த்தம். பீஹாரில், பா.ஜ., கூட்டணியின் வெற்றி உறுதியான நிலையில், அதை தடுப்பதற்காக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது, டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.
அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேலும், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கும்பகோணத்தை தனி மாவட்டமாக தி.மு.க., அரசு அறிவிக்க வேண்டும். திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
- வாசன்,
தலைவர், த.மா.கா.,

