நீதி கேட்கும் போராளியாக பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு
நீதி கேட்கும் போராளியாக பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு
ADDED : ஜன 12, 2024 12:14 AM
சென்னை:இந்திய ஒற்றுமை நீதி பயணம் குறித்த நுால் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மதுகவுட் யாக் ஷி , அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஊடக தமிழக பொறுப்பாளர் செல்வி பாவ்யா நரசிம்மமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், அவர்கள் அளித்த பேட்டி:
பாரத் ஜோடோ நியாய யாத்திரையை, மணிப்பூரில் இருந்து, ஜன., 14ம் தேதி ராகுல் துவங்குகிறார். மொத்தம் 66 நாட்கள், 6,713 கி.மீ., நடக்கிறார். மார்ச் 20ம் தேதி யாத்திரை மும்பையில் நிறைவு பெறும். 110 மாவட்டங்களையும், 15 மாநிலங்களையும் யாத்திரை கடக்கிறது.
ராகுலுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யாத்திரையில் இவர்கள் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்த வரையறையும் கிடையாது. யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். நீதி கேட்கும் போராளியாக பொதுமக்கள் பங்கேற்க, bharatjodonyayatra.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 98918 02024 என்ற மொபைல் போன் எண்ணுக்கு 'மிஸ்டு கால்' தரலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.