ADDED : ஆக 19, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நடுநிலையான அமைப்பு. அதன் மீது, தொடர்ந்து குற்றம் சுமத்தி, ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால், அது உண்மையாகிவிடும் என, காங்., மற்றும் அதன் தலைவர்கள் நம்புகின்றனர். அதனாலேயே, ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கின்றனர்.
மத்திய அரசின் மீது கோபம் இருந்தால், அதை தேர்தல் கமிஷன் மீது காட்டுவது வழக்கமாகி விட்டது. அ.தி.மு.க., கூட்டணி, இன்னும் விரிவாக்கப்படும். கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., --- பா.ஜ., இணைந்து எடுக்கும் முடிவு, பிற கூட்டணிகளுக்கு இறுதி முடிவாக இருக்கும்.
-வாசன், தலைவர், த.மா.கா.,

