ADDED : மே 09, 2026 04:59 AM
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் நேற்று திடீரென ஹைதராபாத் புறப்பட்டு சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் திடீரென ஹைதராபாத் புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் தங்கியிருந்தால் பாதுகாப்பில்லை என கட்சி தலைமை கருதியதால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் தெலுங்கானா மாநிலத்திற்கு, அவர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார், ஜமால் முகமது, தாரகை கத்பட் ஆகியோர், நேற்று இரவு 7:00 மணிக்கு சென்னை விமா ன நிலையத்தில் இருந்து, ஹைதராபாத் புறப்பட்டு சென்றனர். எம்.எல்.ஏ., பிரவீன், ஏற்கனவே பெங்களூரு சென்று விட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுக்கும் நாளில், அவர்கள் சென்னை திரும்புவர் என தகவல் வெளியாகி உள்ளது.
